top of page

Donation of dry foods for families who have children under
5 years were affected by severe flooding

பாரி அறக்கட்டளை கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையுமானது இன்றைய தினம் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்லுண்டாய் பகுதியில் குடியிருப்புகளில் பாதிக்கப்பட்டு இடைத் தங்கல் முகாமாக செயற்பட்டு வரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் தங்கியிருக்கும் 1 - 5 வயது வரையான 33 பிள்ளைகளுக்கு 66,000.00 ரூபாய் பெறுமதியான பால்மா பக்கெட் மற்றும் பிஸ்கட் பொருட்கள் உள்ளடங்கிய பொதிகள் இன்று 01.12.2024ம் திகதி மு.ப 10மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த அனர்த்த கால செயற்றிட்டத்தினை விரைந்து நடைமுறைப்பபடுத்துவதற்கு ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கிய யா/மானிப்பாய் இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் திரு.து.திலீப்குமார் அவர்களுக்கும் மற்றும் நன்கொடையாளர்களிடம் இருந்து குறித்த கருத்திட்டதத்தினை(100 பிள்ளைகளுக்கு) வழங்குவதற்கு 200,000.00 ரூபாய் உயரிய நிதிப் பங்களிப்பினை பெற்று வழங்கிய நெதர்லாந்து தேசத்து சிரேஷ்ர ஆலோசகர் திரு. சி.இரவீந்திரன் மற்றும் நிறுவுநர் திருமதி விமலரஞ்சிதன் சசிவதனா அவர்களுக்கும் எமது அமையம் சார்பாக இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

bottom of page